தனியார் மினி பேருந்து சேவைகள் பாதிப்புக்கு விரைவில் தீர்வு - போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் மினி பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தனியார் மினி பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை சமாளிக்க வழித்தடத்தில் கூடுதலாக 4 கி.மீ. தூரம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இது குறித்து தனியார் மினி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.