கைத்தறி மற்றும் கதர் துறை சார்பில் புதிய கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கைத்தறி மற்றும் கதர் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Update: 2022-04-29 16:18 GMT
சென்னை,

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் கதர் துறை சார்பில் தஞ்சாவூர், கரூர், விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 6 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நெசவுக்கூடும், பொதுவசதி மையக்கட்டிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலை ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 

இந்த கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்