சாராயம் விற்றதாக கைதானவர் ‘திடீர்’ சாவு
சாராயம் விற்றதாக கைதானவர் திடீரென உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச் சாட்டினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது48). இவரது மனைவி மலர். இவர்களுக்கு திருமூர்த்தி, தினகரன் என 2 மகன்களும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.
தங்கமணி சாராய வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 26-ந்தேதி அவரது வீட்டிற்கு வந்த திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராய விற்பனை தொடர்பாக தங்கமணியை விசாரணை நடத்திவிட்டு அனுப்பி விடுவதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு, அவரை அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்து தங்கமணியை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தனர்.
கைதி சாவு
சிறையில் தங்கமணிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக தங்கமணி உயிரிழந்ததாக போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
ஆனால் தங்கமணிக்கு இதுவரை வலிப்பு வந்ததே இல்லை என்றும், போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அவரை கடுமையாக தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 போலீசார் மற்றும் திருவண்ணாமலை சிறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கமணியின் மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேசை சந்தித்து மனு கொடுத்தனர்.