போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). இவர் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள்.
இதுகுறித்து அவர்கள் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.