குரல் வள தின கருத்தரங்கு

ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் குரல் வள தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2022-04-27 17:26 GMT
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் உள்ள பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை சார்பில் உலக குரல் வள தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி டீன் டாக்டர் கொட்டூர் தலைமை தாங்கினார். பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை தலைவர் ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம் கலந்துகொண்டு குரல் வளத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
சென்னையை சேர்ந்த குரல் வள நிபுணர் டாக்டர் பிரகாஷ் குரல் வளத்தை பரிசோதிக்கவும், பாதுகாக்கவும்  பயன்படுத்தப்படும் விஞ்ஞான முறைகள் குறித்தும், அந்த வசதிகள் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இணை பதிவாளர் பெருமாள் செய்திருந்தார். முடிவில் பேராசிரியர் ராதிகா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்