தூக்குப்போட்டு சமையல்காரர் தற்கொலை
பாகூர் அருகே சமையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் வாழப்பட்டு சாலையை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 60). சமையல்காரர். இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். மேலும் குடிப் பழக்கமும் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட் களாக நோயால் கடுமையாக அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர், மற்றொரு வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.