தஞ்சை: தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி - சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி..!
தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை,
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேர் மீது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர்.
15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.