நடிகர் விமல் புகார் - தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது
சென்னை, விருகம்பாக்கத்தில் 'மன்னர் வகையறா' படத் தயாரிப்பாளர் சிங்காரவேலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
மன்னர் வகையாறா திரைப்படத்தில் வரவு செலவு கணக்கை கையாண்டபோது மோசடியில் ஈடுபட்டதாக கூறி நடிகர் விமல் சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தநிலையில் நடிகர் விமல் அளித்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சிங்காரவடிவேலனை போலீசார் கைது செய்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு நடிகர் விமல் அளித்த புகாரின்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். ரூ.5 கோடி வரை பணமோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் புகார் அளித்திருந்தார்