கோவை ரெயில் நிலையத்தில் 63 கிலோ கஞ்சா பறிமுதல்..!
டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி சென்ற 63 கிலோ கஞ்சாவை, கோவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை ரெயில் நிலையத்திற்க்கு இன்று காலை 10 மணியளவில் டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தடைந்தது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியின் சீட்டிற்க்கு அடியில் 63 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுசில் முண்டா என்பவரிட, விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.