ஜிப்மர் இயக்குனருக்கு கொரோனா
புதுவை ஜிப்மர் இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவை ஜிப்மர் இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
4 பேருக்கு தொற்று
புதுச்சேரி கடந்த மாதம் 31-ந்தேதி 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறியது. அதன்பின் சில நாட்கள் யாரும் தொற்றினால் பாதிக்கப்படாமல் இருந்தனர்.
தொடர்ந்து 15 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படாத நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது 4 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் இயக்குனருக்கு கொரோனா
மேலும் நாடு முழுவதும் தற்போது தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வாலுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் ஜிப்மர் வளாகத்தில் உள்ள தனது குடியிருப்பில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மீண்டும் கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது.