பெட்ரோல், டீசல் விலை உயர்வை திசை திருப்ப மத்திய அரசு முயற்சி - தயாநிதி மாறன் எம்.பி. குற்றச்சாட்டு

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திசை திருப்ப முயற்சி செய்வதாக தயாநிதி மாறன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-04-24 09:38 GMT
சென்னை,

சென்னை மண்ணடியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மாடி பூங்கா புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்.பி., பெட்ரோல், டீசல் விலை உயர்வை திசை திருப்ப மத்திய அரசு பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு அளித்தாலே மின் தட்டுப்பாடு நீங்கிவிடும் என அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்