கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்க - மருத்துவத்துறை செயலாளர் கடிதம்

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2022-04-24 06:27 GMT
சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும்  எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழகத்தில் அலுவலகங்கள் ,கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட குருநாதருக்கு விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். தமிழக முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். 

வடமாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . 

மாவட்ட அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்