தூத்துக்குடி: மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து...!

ஆறுமுகநேரி அருகே மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-04-24 05:30 GMT
ஆறுமுகநேரி, 

சென்னை வடபழனியில் சேர்ந்த ஒரு குழுவினர் சுற்றுலாவிற்காக இன்று திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். கைக்குழந்தை, பெண்கள் உள்பட 14 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 

இன்று அதிகாலையில் திருச்செந்தூரிலிருந்து அவர்கள் வேன் மூலம் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆறுமுகநேரி அடுத்த தண்ணீர்பந்தல் கிராமம் அருகே செல்லும்போது வேன் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி வயல்வெளியில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தால் வேனில் இருந்தவர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே அங்கு சென்று அவர்களை மீட்டனர். பலருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

வேன் மோதியதால் மின் கம்பம் முழுவதுமாக சேதமடைந்தது. ஆனாலும் நல்லவேளையாக உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழாததால் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்