இந்தியாவில் கொரோனா ‘ஆர்-வேல்யூ’ கணிசமாக அதிகரிப்பு - சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா ‘ஆர்-வேல்யூ’ கணிசமாக அதிகரித்திருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Update: 2022-04-23 17:54 GMT
சென்னை,

ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை அடிப்படையாக கொண்டு ‘ஆர்-வேல்யூ’ (Reproductive value) கணக்கிடப்படுகிறது. இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஆர்-வேல்யூ கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 

ஆர்-வேல்யூ 1-க்கு குறைவாக இருந்தால் தொற்று பரவல் குறைவாக உள்ளது என்றும் 1-க்கு அதிகமாக இருந்தால் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது என்றும் மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் தற்போதைய ஆர்-வேல்யூ 1.3 ஆக உள்ளது என்றும் தலைநகர் டெல்லியில் 2.1 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதா என்பதை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது என்றும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 2 நபர்களுக்கு நோய்த்தொற்றை கடத்துகிறார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மேலும் செய்திகள்