3 கோவில்களில் திருப்பணிகள்
3 கோவில்களில் திருப்பணிகளை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பூரணி பொற்கலை சமேத வில்லுக்குட்டி அய்யனாரப்பன், பொறையாத்தம்மன், பிடாரி அம்மன் ஆகிய 3 கோவில்களில் ரூ.26 லட்சத்து 60 ஆயிரம் செலவில் திருப்பணிகள் தொடங்கின. இதை சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பூரணாங்குப்பத்தை சேர்ந்த மூத்த சிற்பி சிலம்பு சேகர் சிறப்பு பூஜைகளை செய்தார். இதில் கோவில் அறங்காவல் குழு தலைவர் எழில்ராஜா, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.