தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்
தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. வலியுறுத்தினர்.
புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியால் புதுச்சேரி எல்லையான மதகடிப்பட்டு கடை தெருவில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகாவிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து கோபிகா முறையிட்டார். அதன்பேரில் உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் உறுதி அளித்தார்.