திண்டிவனம்: சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தால் பரபரப்பு...!

திண்டிவனம் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-23 14:00 GMT
திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 28).  இவருடைய அக்கா மோகனா திண்டிவனம் தேவாங்கர் தெருவில் உள்ள மருத்துவரை பார்த்து மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சென்றனர். 

இவர்கள் ஓட்டிச்சென்ற மின்சார ஸ்கூட்டர் மருத்துவமனைக்கு எதிராக சாலையோரம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மின்சார ஸ்கூட்டர் வெப்பம் தாங்காமல் பேட்டரியில் இருந்து ஆசிட் கசிந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

இந்த விபத்தின் போது அருகில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் தீ பற்றியது. பின்னர் இதுகுறித்து அந்த வழியாக வந்த திண்டிவனம் சப்-கலெக்டர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு  வீரர்கள் மின்சார ஸ்கூட்டர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

மேலும் செய்திகள்