கல்பாக்கம் அருகே 2 1/2 வயது மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு தாயும் தற்கொலை..!

கல்பாக்கம் அருகே தனது 2 1/2 வயது மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-23 04:40 GMT
செங்கல்பட்டு:

கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 40), பில்டிங் கான்ட்ராக்டர். இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 32). இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் இரண்டரை வயது மகனும் உள்ளனர்.

மகன் அரிகரசுதன் 'ஆர்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டு வாய்பேச முடியாமல் இருப்பதால், அவருக்கு ஆக்குபேஷன் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. மகனின் மருத்துவ சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தாய் கோடீஸ்வரி மன உளச்சலில் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரண்டரை வயது மகனை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்று விட்டு அவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த சதுரங்கபட்டினம் போலீசார் இரு உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கோடீஸ்வரியின் சகோதரர் ரமேஷ் என்பவர் இருவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரியின் கணவர் பூபதி மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்