நெடுஞ்சாலை துறையில் முறைகேடுகளை தடுக்க, மே மாதம் முதல் உள்தணிக்கை முறை செயல்படுத்தப்படும்
நெடுஞ்சாலை துறையில் முறைகேடுகளை தடுக்க வரும் மே மாதம் முதல் உள்தணிக்கை முறை செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெடுஞ்சாலை துறையில் பல்வேறு கால கட்டத்தில் பல புதிய திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல நடைமுறைகள் மாற்றப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் சாலைகள் அதிகரித்து வருவதால் ஆண்டு தோறும் நெடுஞ்சாலை துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 10 மாத காலத்தில் புதிதாக ஆட்சி அமைத்து இந்த துறையை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இயக்கி வருகிறேன்.
தற்போது உள்தணிக்கை முறையை நெடுஞ்சாலைத்துறையில் புதிதாக அமல்படுத்தி உள்ளோம். ஆண்டுக்கு ஒரு முறை நெடுஞ்சாலை துறையில் உள்ள பிரிவுகளில் செய்யப்படும் பணிகள் குறித்து மற்ற பிரிவின் அதிகாரிகள் மூலம் உள்தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
வரும் மே மாதம் முதல் வாரத்தில் இந்த உள்தணிக்கை செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உள்தணிக்கை செய்து அறிக்கையினை நெடுஞ்சாலைத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தற்காலிக பணி நீக்கம்
இதன் மூலம் நெடுஞ்சாலை துறையில் முறைகேடுகள் நடைபறுவதை வெகுவாக குறைக்க முடியும். கரூர் மாவட்டத்தில் சில சாலை பணிகள் முடிவடைவதற்கு முன்னரே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த 6-ந்தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை சூப்பிரண்டு என்ஜினீயரை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக 7-ந்தேதியே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆர்.கோதண்டராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைத்துறையில் தவறுகள் நடைப்பெறக்கூடாது என அரசு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையில் இதுபோன்ற தவறுகள் இனி நடைபெற கூடாது என்பதற்காகவே இந்த நிரந்தரமாக ஆண்டு தோறும் உள்தணிக்கை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள்
உளுந்தூர்பேட்டை-சேலம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒருவழிச்சாலையாக உள்ள சில இடங்களில் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. இதுகுறித்து மத்திய மந்திரியிடம் பேசியுள்ளேன். கடிதம் மூலமும் தெரிவித்துள்ளேன். இதை சரி செய்ய விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் மீது மீண்டும் சாலைகள் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலை பணிகள் மேற்கொள்ள சட்டம் உள்ளது. எனவே 5 ஆண்டுகள் நிறைவடைந்த சாலைகள் மட்டுமே மீண்டும் சீரமைக்கப்படும். என்னிடம் எந்த துறையை கொடுத்தாலும் அதில் புதுமையை உருவாக்க வேண்டும் என நினைக்க கூடியவன் நான். நெடுஞ்சாலை துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், தலைமை என்ஜினீயர்கள் சந்திரசேகரன், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.