புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
புதுவையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
புதுவை கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 181 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்குக் கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 320 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,386 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 209 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 69 ஆயிரத்து 942 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.