புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் தருமபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார். தொடர்ந்து கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதையடுத்து நீலகிரியை சேர்ந்த பங்குகுரு செபஸ்தியான் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்சியாக வருகிற 29-ந் தேதி இரவு, நாகப்பட்டினத்தை சேர்ந்த ராயல்பிரிட்டோ தலைமையில் 3 பெரிய தேர்பவனியும், 30-ந் தேதி இரவு காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டு 5 தேர்பவனியும் நடைபெற உள்ளது. மே 1-ந் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.