அடிக்கடி கரண்ட் கட்... ஆத்திரத்தில் மின் ஊழியர் மண்டை உடைப்பு... ஒருவர் கைது

அடிக்கடி கரண்ட் கட் ஆனதால் கோபமடைந்த கும்பல் ஒன்று மின்பகிர்மான அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Update: 2022-04-22 14:35 GMT
கோப்புப் படம்
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் மின்பகிர்மான அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் ஊழியர் மண்டை உடைந்த விவகாரம் தொடர்பான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூரில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மணவாளநகர் மின்பகிர்மான அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கணினி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளது. மேலும் களஉதவியாளர் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. 

இதையடுத்து மின்பகிர்மான ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடைய பாலாஜி என்பவரை போலீசார் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்