மனைவியுடன் தகாத உறவு : மைத்துனரை ஓட ஓட விரட்டி வெட்டிய பெயிண்டர்...!
மனைவியுடன் தகாத உறவு வைத்த மைத்துனரை பட்டபகலில் ஓட ஓட விரட்டி அரிவாளல் வெட்டிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சி மலைக்கோட்டை தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (வயது 43). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்துருவின் தங்கையை சிவக்குமார் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமாரின் மனைவி இறந்து விட, அவரது மகளும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. ஆகையால் சந்துரவின் வீட்டில் சிவக்குமார் வசித்து வந்தார்.
இதையடுத்து சந்துருவின் மனைவிக்கும் , சிவகமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை சந்துரு கண்டித்துள்ளார்.
இதனால் சந்துருவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி சிவக்குமாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு திருவானைக்காவல் ரெயில்வே மேம்பாலத்தில் வைத்து சிவக்குமாரை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சந்துருவை அரிவாளுடன் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், படுகாயமடைந்த சிவக்குமாரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.