சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு

சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-22 04:09 GMT
சென்னை,

சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் 3 நாட்களில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.சென்னை ஐஐடியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12லிருந்து 30 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 18 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற பொதுமக்களுக்கு மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்