ஊசி சிரிஞ்சி வடிவில் சாக்லேட் விற்பனை: விற்பனை குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
ஊசி சிரிஞ்சி வடிவில் சாக்லேட் விற்பனை செய்த குடோனில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவை போதை பொருளா? என கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பூர்,
சென்னை திரு.வி.க. நகர், செம்பியம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டி கடைகளில், சிறுவர்களை கவரும் வகையில் ஊசி சிரிஞ்சி வடிவில் சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவை போதை சாக்லேட்டா? என சந்தேகம் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
இதுபற்றி போலீஸ் மூலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்த சாக்லேட்டுகள், வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவில் உள்ள மொத்த விற்பனை குடோன் ஒன்றில் இருந்து பெட்டி கடைகளுக்கு வினியோகம் செய்வது தெரிந்தது.
குடோனில் சோதனை
இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜபாண்டி, ஜெயகோபால், கண்ணன், செல்வம் ஆகியோர் வண்ணாரப்பேட்டையில் உள்ள குடோனில் நேற்று மதியம் திடீரென ஆய்வு செய்தனர். சிரிஞ்சி போன்ற ஊசி வடிவிலான சாக்லேட்டுகள், ஜார் ஒன்றுக்கு 30 வீதம், 37 ஜார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை தவிர, உற்பத்தி தேதி உள்ளிட்ட முறையான விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்து இருந்த நொறுக்கு தீனிகளையும் பறிமுதல் செய்தனர்.இதுபற்றி உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:-
ஆய்வுக்கு...
ஊசி சிரிஞ்சி வடிவிலான இந்த சாக்லேட்டுகள் 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது மும்பையில் இருந்து வருகிறது. மேலும், இவற்றை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். இந்த சாக்லேட் சாப்பிட உகந்து அல்ல. ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே இதில் போதை பொருள் கலந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்ய முடியும். இந்த சாக்லேட் தயாரிக்க ஏற்கனவே மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட சிரிஞ்சிகள் பயன்படுத்தப்பட்டதா? என்பதும் ஆய்வு முடிவில் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.