"கிளிப்பிள்ளை போல் சொல்லிவிட்டேன்"... அதிமுக விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பேட்டி
மதுரையில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த டிடிவி தினகரன் அதிமுக விவகாரம் குறித்து பேட்டியளித்தார்.
மதுரை,
மதுரை கருப்பாயூரணியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகை தந்தார். ம
துரை சுற்றுச்சாலையில் உள்ள தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும், அமமுக ஜனநாயக முறைப்படி வெற்றிபெற்று அதிமுகவை மீட்டெடுக்கும் என்றும் கூறினார்.
இதனை பலமுறை தான் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.