விலையேற்றத்தை கட்டுப்படுத்த அச்சு காகித மூலப்பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் நீக்க வேண்டும்
விலையேற்றத்தை கட்டுப்படுத்த அச்சு காகித மூலப்பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் நீக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான சிவகாசியில், அச்சுத்தொழிலை மட்டும் நம்பி 1½ லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) காரணமாகவும், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாகவும், தொடர்ச்சியாக அதிகரித்து வந்த அச்சு மை, காகிதம், காகித அட்டை, அலுமினிய தகடு மற்றும் ஒளி சுருள் ஆகியவற்றின் விலைகள், இந்த ஆண்டு தொடக்கம் முதல் இரு மடங்காக அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளன.
இதனால், அச்சக உரிமையாளர்கள் அச்சுத்தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளாகி, பல நூற்றுக்கணக்கான சிறு, குறு அச்சகங்கள் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தும் ஏற்பட்டு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் உக்ரைன்-ரஷ்யா போர்சூழல் காரணமாக அச்சு மூலப்பொருட்கள் இறக்குமதியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அச்சக உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அச்சக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், உடனடியாக அச்சு காகித மூலப்பொருட்களுக்கு இடப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.