விருதுநகர்: விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த தாயக் கட்டை...!
விஜயகரிசல்குளம் அகழாய்வின் போது தாயக் கட்டை கிடைத்து உள்ளது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வின் போது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்பட்ட தாயக் கட்டைகள், கலைநயத்துடன் செய்யப்பட்ட, சங்கு வளையல்கள்,சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் குவளைகள், பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்தபடும் சில்லு வட்டுகள்,கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.