திண்டுக்கல்: பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள் சாலை மறியல்...!

திண்டுக்கல் அருகே பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2022-04-20 14:00 GMT
நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலையத்தில் இருந்து செல்லப்பநாயக்கன்பட்டி, மூங்கில்பட்டி வழியாக பட்டணம்பட்டிக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் கடந்த சில நாட்களாக மாலை வேலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் ஏமாற்றமடைந்த அப்பகுதி கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளி, மாணவ, மாணவிகள் பஸ்களை இரு வேளை முறையாக இயக்க கோரியும், கூடுதல் பஸ்கள் விட வேண்டியும் நத்தம்- மதுரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார்கள் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து முறையாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பஸ் மறியல் கைவிடப்பட்டது. 

இதனால் நத்தம்- மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்