கவர்னர் விவகாரம்: வீடியோவை முதல் - அமைச்சர் பார்க்க வேண்டும் - அண்ணாமலை

நான் வெளியிட்ட வீடியோவை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2022-04-20 09:05 GMT
சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்தநிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நான் வெளியிட்ட வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்க வேண்டும்.  கவர்னரை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை.

கவர்னரின் கார் மீது கொடி கம்பம் விழுந்த வீடியோவை பார்த்து விட்டுமுதல்-அமைச்சர் பேச வேண்டும். கவர்னர் கான்வாய் மோசமான நிலையில் கூட்டத்தை கடந்து சென்றுள்ளது.

கவர்னரின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுவதற்கும் வெளியில் நடந்துகொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்நியன், அம்பி போல அவர் நடந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்