கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக: கலெக்டர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-04-20 03:38 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 மாதங்களாக சரிவைக் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 30 என்ற கணக்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதியவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் போன்றவற்றை தீவிரப்படுத்த வேண்டும்.

அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்