அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு
மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க, அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
மாணவர் தமிழ் மன்றங்கள்
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.5 லட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு ரூ.5 கோடியும் இவ்வாண்டு போட்டிகள் நடத்திட ரூ.36 லட்சமும் என மொத்தம் ரூ.5.36 கோடி வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஆண்டுக்கு 3 தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகள் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.5.60 கோடி வழங்கப்படும்.
திருக்குறள் மாநாடு
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படும். இதற்கென ரூ.2.11 கோடி வழங்கப்படும். தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் உயர் புள்ளிகளைப் பெற்றிட தமிழ்ப் பல்கலைக்கழக கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சிறப்பு சீர் காப்பு செய்யப்படும். இதற்கென ரூ.2 கோடி வழங்கப்படும்.
திருக்குறளுக்கு ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) அங்கீகாரம் பெறும் வகையில் பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கத்தில் திருக்குறள் மாநாடு நடத்திட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
கணினி மற்றும் அச்சுக் கருவிகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகத்தை மேம்படுத்திடவும், நூலகத்தை கணினிமயமாக்கி தரம் உயர்த்திடவும் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் நூலகத்தினை மேம்படுத்திடவும் ரூ.78 லட்சம் வழங்கப்படும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.61.50 லட்சம் வழங்கப்படும். தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு கணினி மற்றும் அச்சுக் கருவிகள் வழங்கப்படும். இதற்கென ரூ.57 லட்சம் வழங்கப்படும்.
புதிய கலைச்சொல் அகராதி
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கம் செய்வதற்காகத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து துறைசார் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு புதிய கலைச் சொல் அகராதிகள் உருவாக்கப்படும். இதற்கென ரூ.35 லட்சம் வழங்கப்படும்.
மதுரை, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அயல்நாடு வாழ் தமிழர்களின் படைப்புகளுக்காகச் சிறப்பு பிரிவு ஏற்படுத்திடவும் உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தைப் புனரமைப்பு செய்திடவும் ரூ.26 லட்சம் வழங்கப்படும்.
தமிழ் நூல்கள்
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தம் சந்ததியினர் மொழி வரலாறு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் அங்குள்ள நூலகங்களுக்குத் தமிழ் நூல்கள் வழங்கப்படும். இதற்கென ரூ.20 லட்சம் வழங்கப்படும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழின் மீது ஆர்வத்தையும் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்படும். இதற்கென ரூ.16.72 லட்சம் வழங்கப்படும்.
தமிழில் போட்டிகள்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தில் பயிலரங்கம் நடத்திடவும் மண்டல மற்றும் மாநில அளவில் தமிழில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் போட்டிகள் நடத்திடவும் ரூ.16 லட்சம் வழங்கப்படும். கலைப் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து திருக்குறளை நாடக வடிவிலும் நாட்டுப்புறப் பாடல்கள் வடிவிலும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும். இதற்கென ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
சிறந்த மாவட்டங்களுக்கு பரிசு
தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக மற்றும் சிறப்பாக செயல்படுத்தும் முதல் 3 மாவட்டங்களுக்குப் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியன மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் வழங்கப்படும். இதற்கென ரூ.7 லட்சம் வழங்கப்படும்.
தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதளம் மற்றும் அலைபேசி மூலம் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களைத் தாமே உள்ளீடு செய்திடும் வகையில் “கலைச்சொல் தொகுப்பி” எனும் செயலி தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உருவாக்கப்படும். இதற்கென ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
தமிழ் உச்சரிப்பு வகுப்பு
அனைத்துக் காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும், தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும். இதற்கென ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.