டான்செட் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு..!

டான்செட் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-19 13:26 GMT
சென்னை,

தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, டான்செட் பொது நுழைவு தேர்வுக்கு வரும் 21-ம் தேதி மாலை 4 மணி வரை https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இந்த இணையதளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது மாணவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல், செல்போன் எண்ணை பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்