தமிழக கவர்னருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் : அண்ணாமலை குற்றச்சாட்டு

கவர்னர் ஆர்.என் ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் .

Update: 2022-04-19 10:41 GMT

சென்னை ,

மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என்  ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு என  பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என்  ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு.கவர்னர் கான்வாய் மீது திமுகவினர் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசினர்.

இன்று நம் மேதகு கவர்னருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்