ஓசூரில் விமான நிலையம் உருவாக்க தமிழக அரசு முயற்சி

ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையம் உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Update: 2022-04-19 09:54 GMT
சென்னை:

ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையம்  உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் இன்று தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில் துறையின் வளர்ச்சி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, தனிமனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தில் உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மயமாக இருப்பதால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியை சுற்றியுள்ள விமான போக்குவரத்துத்துறை மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்கள் ஆய்வு செய்யுமாறு டிட்கோவை அரசு பணிந்துள்ளதாகவும், அரசின் அறிவுறுத்தலின்படி ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான . இந்திய விமான நிலைய ஆணையம், சாத்தியக் கூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 


மேலும் செய்திகள்