ராமநாதபுரம்: மான்கொம்பு கடத்தல் குறித்து வனச்சரக அலுவலர் விசாரணை

ராமநாதபுரம் அருகே மான்கொம்பு கடத்தல் குறித்து வனச்சரக அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-04-19 07:24 GMT
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மான் கொம்புகடத்துவதாக ரகசிய தகவலின் பேரில் கடலாடி போலீசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது புரசங்குளம் கண்மாய் அருகே நின்றிருந்த காரில் சோதனையிட்டதில் காரில் ஒரு மான் கொம்பு மற்றும் அரிவாள் இருந்தது.

அதனை கைப்பற்றிய கடலாடி போலீசார் கார் மற்றும் மான் கொம்பு அரிவாள் ஆகியவற்றை சாயல்குடி வனச்சரக அலுவலர் இடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்