சமூக வலைதளங்களில் மறுபதிவு: எஸ்.வி.சேகர் விளக்கம் அளிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

சமூக வலைதளங்களில் மறுபதிவு: எஸ்.வி.சேகர் விளக்கம் அளிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-04-18 21:57 GMT
சென்னை,

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பகிர்ந்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக புகார் அளித்த பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில், எஸ்.வி.சேகரின் டுவிட்டர் மறுபதிவுகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதி, மற்ற பதிவுகளை அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற பதிவுகளை அவர் அப்படியே மறுபதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. சமுதாயத்தில் பொறுப்பான மனிதர்கள், இதுபோன்ற செயல்களை செய்வது ஏற்புடையதல்ல என்று அதிருப்தி தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்