கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கரையாம்புத்தூரில் கல்லூரி மாணசர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-18 15:23 GMT
பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் சொர்ணவூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 21). இவர் தாகூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்