கோவில் திருவிழாவில் அரிவாள் மீது நின்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்...!
கோவில் திருவிழாவின் போது பக்தர் ஒருவர் அரிவாள் மீது நின்று நேர்த்திக்கடன் செலுத்தினார்.
போடி,
தேனி மாவட்டம் போடி அருகே ஜக்கம்ம நாயக்கன்பட்டியில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்து. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நேத்திக்கடன் நிகழ்ச்சியின் போது பெருமாள் பக்தர் ஒருவர் இரண்டு பெரிய அரிவாள் மீது தனது இரண்டு கால்களிலும் நின்று, ரத்தம் சொட்டச் சொட்ட வேண்டுதலை நிறைவேற்றினார். இதனை கண்டு பக்தர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.
மேலும், வியாபாரம் மற்றும் விவசாயம் செழிக்க வருடா வருடம் இந்த நேத்திக்கடன் செலுத்துவது வழக்கம் என்று அரிவாளில் நின்றவரும் வெங்கடாசலம் தெரிவித்தார்.