வாலிபர் மீது தாக்குதல்
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் சேதுமணி (வயது 24). இவருக்கு குளம் ஒன்றில் மீன் பிடிக்க வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்கு துணைக்கு ஆள் தேவைப்பட்டதால், காரைக்கால் திருநகரில் உள்ள தனது நண்பர் அரியை காண சென்றார்.
அப்போது அங்கு வந்த சச்சின் கிஷோர் (27) என்பவர் ஏன், இங்கு வந்தாய் என்று கூறி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சேதுமணி காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் கிஷோரை தேடி வருகின்றனர்.