வரும் 24- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
வரும் 24 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
வரும் 24 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.