தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது...

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.

Update: 2022-04-17 04:28 GMT
 சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கைகள் மிதான விவாதம் நடைபெற்று வந்தது.

கடந்த 13-ந்தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 14-ந்தேதி முதல் 17-ந்தேதி (இன்று) வரை 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

விவாதத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்து, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

தொடர்ந்து வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக அரசு சார்பில் சில முக்கியமான சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்