புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

புதுவையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 3 போ் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Update: 2022-04-16 14:19 GMT
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஏற்கனவே தொற்று பாதித்த 3 பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று  முதல் தவணை தடுப்பூசியை 4 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 98 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 31 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 61 ஆயிரத்து 553 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்