சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது...!

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-16 08:30 GMT
அன்னூர், 

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன். இவரது மகன் ஹரிஹரசுதன்(28) இவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் 6 வயது சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் விளையாட போகலாம் என்று அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஹரிஹரசுதனுக்கு தர்ம அடி கொடுத்து அன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அன்னூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்