பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா - வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்....!

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2022-04-16 06:45 GMT
பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 11-ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று சுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அதிகாலை 4.00 மணி அளவில் ஊதாபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிறார்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பக்தர்களால் மஞ்சள் நீர் பீச்சாங்குழல் துருத்தி மூலம் தண்ணீர் பீச்சி அடித்து தல்லாகுளம் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இதனை தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் காக்கா தோப்பு திருக்கண் மண்டபத்தில் கோவிலுக்கு வருகிறார். நாளை மறுநாள்  கருடவாகனத்தில் எழுந்தருளி தசாவதார சேவை நடைபெற உள்ளது.

இத்திருவிழாவை காண பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொள்ளவது வழக்கம். இதனால் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை தலைமையில் ஆயிரக்கணக்கான  போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்