அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்: 25 மாவட்டங்களில் தேர்வான நிர்வாகிகள் பட்டியல்

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் 25 மாவட்டங்களில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

Update: 2022-04-15 18:46 GMT
சென்னை,

அ.தி.மு.க.வில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வேலூர் மாநகர், புறநகர், சேலம் மாநகர், புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, ஈரோடு மாநகர், புறநகர் மேற்கு, நீலகிரி, வடசென்னை வடக்கு (கிழக்கு), (மேற்கு), வடசென்னை தெற்கு (மேற்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு,) தெற்கு (கிழக்கு), (மேற்கு), சென்னை புறநகர், திருவள்ளூர் மத்தியம், கடலூர் மேற்கு, தெற்கு, தென்காசி தெற்கு ஆகிய அ.தி.மு.க. அமைப்புரீதியான மாவட்டங்களில் ஒருமனதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வடசென்னை

இதுதொடர்பான பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர். நிர்வாகிகள் பட்டியல் வருமாறு:-

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்- ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், மேற்கு பகுதி செயலாளர் ஆர்.நித்தியானந்தம், தெற்கு பகுதி செயலாளர் எம்.என்.சீனிவாச பாலாஜி, பெரம்பூர் கிழக்கு பகுதி செயலாளர் ஜே.கே.ரமேஷ், மேற்கு பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கரன், தெற்கு பகுதி செயலாளர் வியாசை எம்.இளங்கோவன்.

வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்- கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.சந்திரசேகர், மேற்கு பகுதி செயலாளர் பட்மேடு டி.சாரதி, வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர் ஜி.ஆர்.பி. கோகுல், மேற்கு பகுதி செயலாளர் திருமங்கலம் கே.மோகன்.

வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்- எழும்பூர் வடக்கு பகுதி செயலாளர் டி.மகிழன்பன், தெற்கு பகுதி செயலாளர் ஏ.சம்பத்குமார், துறைமுகம் வடக்கு பகுதி செயலாளர் எம்.கன்னியப்பன், தெற்கு பகுதி செயலாளர் கே.மாரிமுத்து.

தென்சென்னை

தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்- தியாகராயநகர் பகுதி செயலாளர் மு.உதயா என்கிற உதயன், அண்ணாநகர் பகுதி செயலாளர் த.தசரதன். தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்- மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர் டி.ஜெயச்சந்திரன், மேற்கு பகுதி செயலாளர் ஜெ.விஜயபாஸ்கர், வடக்கு பகுதி செயலாளர் பி.கணேஷ்பாபு, வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் எம்.கணேசன், மத்திய பகுதி செயலாளர் ஆர்.சிசு என்கிற சிவசுப்பிரமணி, மேற்கு பகுதி செயலாளர் என்.கே.அச்சுதன். தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்- சைதாப்பேட்டை கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.எம்.ஷேக் அலி, மேற்கு பகுதி செயலாளர் எம்.சுகுமார், விருகம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் சி.கே.முருகன், தெற்கு பகுதி செயலாளர் ஏ.எம்.காமராஜ்.

சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.கே.பழனிவேல், மேற்கு பகுதி செயலாளர் டி.சி.கருணா, வடக்கு பகுதி செயலாளர் ஜி.எம்.ஜானகிராமன், தெற்கு பகுதி செயலாளர் வி.குமார், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் வி.பரணிபிரசாத், மேற்கு பகுதி செயலாளர் எஸ்.ராஜசேகர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஈ.ராஜசேகர், குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.ஏசுபாதம், பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் நகர செயலாளர் எம்.எஸ்.டி. தேன்ராஜா.

திருவள்ளூர்

திருவள்ளூர் மத்திய மாவட்டம்- மதுரவாயல் கிழக்கு பகுதி செயலாளர் ஏ.தேவதாஸ், மேற்கு பகுதி செயலாளர் ஈ.கந்தன், வடக்கு பகுதி செயலாளர் எம்.இம்மானுவேல், தெற்கு பகுதி செயலாளர் கே.தாமோதரன், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.பூங்கோவன், தெற்கு ஒன்றிய செயலாளர் புட்லூர் ஆர்.சந்திரசேகர், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஜி.டி. கவுதமன், மேற்கு ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.மகேந்திரன், வில்லிவாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பேரழகன் என்கிற ராஜா, பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், திருமழிசை பேரூராட்சி செயலாளர் டி.எம்.ரமேஷ்.

மேற்கண்ட தகவல் அ.தி. மு.க. தலைமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பகுதி அவைத் தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்