திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் வடம் பிடித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்...!
திண்டிவனம் ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வடம் பிடித்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவில் சித்திரை மாத திருத்தேர் உற்சவம் இன்று நடைபெற்றது.
திருத்தேர் விழா கடந்த 6-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 7-ம் தேதி கொடியேற்றத்துடன் சூரிய பிரபை சந்திரப் பிரபை ஆகிய நேரங்களில் பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெற்றது. 8-ம் தேதி முதல் சுவாமி சந்திரசேகர் பவளக்கால் வாகனத்திலில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தேறியது. 15-ம் தேதியான இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம் நேரு வீதியில் சென்று கொண்டிருந்த போது சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேரின்வடம் பிடித்து இழுத்து சாமி கும்பிட்டார். அப்போது அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
அமைச்சருடன் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ சேது நாதன் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சீனி ராஜ், சந்திரன் மற்றும் சரவணன், காமராஜ் உட்பட பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.