உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - கோவிலை சூழ்ந்த வெள்ளம்

பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

Update: 2022-04-15 05:39 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதல் வழக்கமான முறையில் பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் மாலையில் திடீரென பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்து கொண்டது. இதனால் கோவிலில் பூஜைகள் நிறுத்திவைக்கப்பட்டன. மேலும் பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்