தொழிலதிபரை கடத்தி சொத்தை எழுதி வாங்கிய வழக்கில் உதவி கமிஷனர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரியின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை,
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷை கடத்திச்சென்று, துன்புறுத்தி அவரது சொத்துகளை 3-ம் நபர் பெயருக்கு எழுதி வாங்கியதாக சென்னை திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., பாண்டியராஜன், போலீஸ்காரர் கிரி உள்பட பலர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உதவி கமிஷனர் சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வந்தது.
ரூ.20 கோடி மோசடி
அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் சந்தோ்ஷ் கூறியதாவது:-
ரூ.20 கோடி மோசடி செய்ததாக திருமங்கலம் போலீசில் ஒரு புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெகடர் சரவணன் உள்ளிட்டோர் ராஜேஷை கடத்தி சென்று 2019-ம் ஆண்டு சில சொத்துகளை எழுதி வாங்கி உள்ளனர். பின்னர் கோவையில் தங்கியிருந்த புகார்தாரரை மீண்டும் சென்னைக்கு கடத்தி வந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை 3-வது குற்றவாளியின் பெயரில் எழுதி வாங்கியுள்ளனர்.
தலைமறைவு
இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்கும் மனுதாரர்தான் முக்கிய நபராக செயல்பட்டு உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து மனுதாரர் சிவகுமார் தலைமறைவாக உள்ளார். தற்போது இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம். எனவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
சமரசம்
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கும், புகார்தாரருக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டது. இது சம்பந்தமாக சமரச ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, உதவி கமிஷனருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
விடமுடியாது
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர் சிவக்குமாருக்கு எதிராக புகார்தாரர் முக்கிய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இப்போது, இருதரப்பும் சமரசமாக போய் விட்டனர் என்பதற்காக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து மனுதாரரை விட்டு விட முடியாது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரியான மனுதாரர் தலைமறைவாகி இருப்பதன் மூலம் அவரது உள்நோக்கம் என்னவென்று வெளிப்படுகிறது. இவரை முன்ஜாமீனில் விட்டால், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டார். எனவே, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.