கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது
கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான பகுதியை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கைவிடப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காதது தான் இதற்கு காரணம் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சென்னைக்கும், புதுவைக்கும் இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை விபத்து சாலை என்று அழைக்கப்படும் அளவுக்கு மிகவும் ஆபத்தான சாலையாக உள்ளது. இந்த சாலையில் பாம்பைவிட மிக மோசமான வளைவுகள் உள்ளன. இவை அனைத்தையும் சரிசெய்து, முதலில் 4 வழிச்சாலையாகவும், பின்னர் 6 வழி, 8 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இதைத்தான் பா.ம.க. 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.மிக முக்கியமான சாலையை 4 வழிச்சாலையாக உயர்த்தும் திட்டம் கைவிடப்பட்டால் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால், மத்திய அரசிடமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடமும் தமிழக அரசு செயலாளர் நிலையில் பேசி, 4 வழி கிழக்கு கடற்கரைச்சாலை திட்டப்பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.